திருமாவளவன் பேசட்டும்: முதலமைச்சர் தான் முடிவெடுப்பார்- டி.கே.எஸ்.இளங்கோவன்
- சில முடிவுகளை எடுப்பார்கள். அதை தலைமை முடிவெடுக்கும். தேர்தல் நேரத்தில் எடுக்கும்.
- அடுத்த தேர்தலில் தான் பேச வேண்டும். போன தேர்தலில் அந்த மாதிரி ஒப்பந்தம் இல்லை.
சென்னை:
கூட்டணி ஆட்சி என்ற கருத்தை வலியுறுத்தி பேசி வரும் திருமாவளவன் குறித்து தி.மு.க. செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவனிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அதன் விவரம் வருமாறு:-
கே: ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று திருமாவளவன் 2 நாளாக கருத்து தெரிவித்து வருகிறாரே?
ப: இதை தலைமையோடு தேர்தல் நேரத்தில் பேசி முடிவெடுக்க வேண்டியது. இப்போது அதுகுறித்து நாங்கள் பேசுவதற்கு ஒன்றுமில்லை.
கே: கடந்த வாரம் மது ஒழிப்பு மாநாடு அறிவிக்கிறார். இப்போது ஆட்சியில் அதிகாரம் பங்கு குறித்து திருமாவளவன் பேசுகிறாரே?
ப: கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் போதுதான் அவர் அதை பேச முடியும்.
ப: அவர் பேசட்டும். பொது வெளியில் பேசுவதற்கு நாங்கள் எப்படி பதில் சொல்ல முடியும். எங்களிடம் பேசினால் தலைவர்கள் பதில் சொல்வார்கள்.
கே: மது ஒழிப்பு மாநாட்டில் தி.மு.க.வும் கலந்து கொள்ளலாம் என்று திருமாவளவன் கூறி வருகிறாரே?
ப: அவர் பேசியதை வைத்து நீங்கள் கேட்கிறீர்கள்.
ஆனால் சீட் ஷேர் என்பது கூட்டணி கட்சிகள் அனைத்தும் அமர்ந்து பேசும்போது, சில முடிவுகளை எடுப்பார்கள். அதை தலைமை முடிவெடுக்கும். தேர்தல் நேரத்தில் எடுக்கும்.
இப்போது அதற்கு பதில் சொல்லக்கூடிய எந்த முடிவையும் தி.மு.க. எடுக்கவில்லை.
கே: அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் பேசி இருக்கிறார். இந்த நேரத்தில் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று திருமாவளவன் எதனால் பேசுவார்?
ப: அதுதான் சொல்கிறேன். அதுபற்றி இப்போ பேசுவதில் வேலை கிடையாது. அடுத்த தேர்தலில் தான் பேச வேண்டும். போன தேர்தலில் அந்த மாதிரி ஒப்பந்தம் இல்லை. அடுத்த தேர்தலில் என்ன வருகிறது என்று பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.