தமிழ்நாடு செய்திகள்
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: ஐ.நா. வாக்கெடுப்பை இந்தியா புறக்கணிப்பதா?- திருமாவளவன் கண்டனம்
- பா.ஜ.க. அரசின் இந்தச் செயலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம்.
- இந்திய அரசு போர் நிறுத்தத்தை வலியுறுத்திக் குரலெழுப்ப வேண்டும்.
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்துக்காக ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை 120 நாடுகள் ஆதரித்து வாக்களித்த நிலையில் இந்தியா அந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்திருப்பது வரலாற்றுப் பிழையாகும். பா.ஜ.க. அரசின் இந்தச் செயலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம்.
ஒருபுறம் பாலஸ்தீனத்தை ஆதரித்துக்கொண்டு இன்னொருபுறம் இஸ்ரேல் தொடுத்துள்ள போரையும் மறைமுகமாக ஆதரிப்பது இந்தியாவின் நன்மதிப்பை உலக அரங்கில் கெடுப்பதாக உள்ளது. எனவே இந்திய அரசு போர் நிறுத்தத்தை வலியுறுத்திக் குரலெழுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.