தமிழ்நாடு

சென்னை திருமங்கலத்தில் ஐடி பெண் ஊழியரின் அருகில் நிர்வாணமாக படுத்து தூங்கியவர் கைது

Published On 2023-07-23 08:37 GMT   |   Update On 2023-07-23 08:37 GMT
  • திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்னுசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
  • பெண்கள் வன்கொடுமைை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை திருமங்கலம் பகுதியில் 26 வயதான ஐடி பெண் ஊழியர் தங்கி உள்ளார். இவர் பணிபுரிந்து கொண்டே அரசு வேலைக்காக படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவு 2 மணிக்கு எழுந்து பார்த்தார் அப்போது தனது அருகில் உடலில் ஒட்டு துணியின்றி நிர்வாணமாக ஒருவர் படுத்திருப்பதை பார்த்து திடுக்கிட்டார்.

உடனே அவர் கத்தி கூச்சல் போட்டார் இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து பார்த்தனர். பின்னர் போதையில் ஆடை ஏதுமின்றி படுத்திருந்த நபரை எழுப்பி விசாரித்தனர் அப்போது அவரது பெயர் பொன்னுசாமி என்பது தெரிய வந்தது 51 வயதான அவர் பொள்ளாச்சியில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் வனவராக பணி புரிந்து வருவதும் தெரிய வந்தது.

ஈரோடு மாவட்டம் குப்பிச்சி பாளையத்தை சேர்ந்த இவர் தனது உறவினரான சதாசிவம் என்பவரின் மகன் கிருஷ்ண காந்த் என்பவரை ஐஏஎஸ் அகாடமியில் சேர்த்து விடுவதற்காக சென்னை வந்துள்ளார். அப்போது திருமங்கலத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார் இந்நிலையில் இரவு மொட்டை மாடியில் மது அருந்திவிட்டு படுத்து உறங்கியவர் மது போதையில் பக்கத்து குடியிருப்பில் இறங்கி ஐடி பெண் ஊழியின் அறையில் போதையில் நுழைந்து படுத்து தூங்கி இருக்கிறார். இது தொடர்பாக ஐ டி பெண் ஊழியர் அளித்த புகாரின் பேரில் திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்னுசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது பெண்கள் வன்கொடுமைை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News