தமிழ்நாடு செய்திகள்

பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு-கோவில் காளைகளை திருடிச்சென்ற கும்பல்

Published On 2022-12-06 11:53 IST   |   Update On 2022-12-06 11:53:00 IST
  • பாலமேடு பகுதிளில் ஜல்லிக்கட்டு காளைகளை தங்களது வீட்டில் பிள்ளையாக வளர்த்து தெய்வமாக வணங்கி பராமரித்து வருகின்றனர்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அலங்காநல்லூர்:

தைப்பொங்கல் என்றாலே நாம் அனைவருக்கும் நினைவில் வருவது உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தான்.

இந்தநிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள் தங்களது காளைகளை இப்போதிருந்தே களத்தில் இறங்கி வீறு கொண்டு விளையாட தயார்படுத்தி வருகின்றனர்.

அலங்காநல்லூர், பாலமேடு பகுதிளில் ஜல்லிக்கட்டு காளைகளை தங்களது வீட்டில் பிள்ளையாக வளர்த்து தெய்வமாக வணங்கி பராமரித்து வருகின்றனர். இந்தநிலையில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் இந்தப்பகுதியில் நேற்று முன்தினம் வேனில் மர்ம கும்பல் வந்து. இவர்கள் ரோட்டில் சுற்றித்திரிந்த மஞ்சமலை சுவாமி கோவில் காளை உள்பட 3 காளைகளை வேனில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றனர். மறுநாள் 3 காளைகள் காணாதது கண்டு உரிமையாளர்கள் பாலமேடு போலீசில் புகார் கொடுத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மர்ம கும்பல் சரக்கு வேனில் காளைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு கோவில் காளைகள் திருடப்பட்ட சம்பவம் காளை வளர்ப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News