தமிழ்நாடு

விருந்தினர்களுடன் சேர்ந்து 'ஸ்கை டைவிங்' செய்து திருமணத்தை கொண்டாடிய புதுமணத்தம்பதி

Published On 2023-07-29 05:49 GMT   |   Update On 2023-07-29 05:49 GMT
  • புதுமண ஜோடியுடன் விருந்தினர்களும் சேர்ந்து ஸ்கை டைவிங் செய்து சாகசத்தில் ஈடுபட்டது பார்ப்பவர்களை வேடிக்கையாக இருந்தது.
  • புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

வாழ்நாளில் ஒரு முறை நடைபெறும் திருமணத்தை மறக்க முடியாத கொண்டாட்டமாக மாற்றுவதற்கு சிலர் திட்டமிட்டு விழா போல கொண்டாடுவார்கள். சிலர் மிகவும் எளிமையாக திருமணத்தை நடத்தி விடுவார்கள். சிலர் முற்றிலும் வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொள்வார்கள். அந்த வகையில் 'ஸ்கை டைவிங்' செய்து திருமணத்தை கொண்டாடிய புதுமணத் தம்பதியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், பிரிசில்லா ஆன்ட்-பிலிப்போ லெக்வெர்ஸ் என்ற புதுமணத் தம்பதி தங்களது திருமணத்தை விருந்தினர்களுடன் சேர்ந்து 'ஸ்கை டைவிங்' செய்து சாகச கொண்டாட்டமாக மாற்றிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது. வீடியோவின் தொடக்கத்தில் புதுமணத் தம்பதி ஒரு உயரமான குன்றின் மேல் இருக்கின்றனர். அவர்கள் தகுந்த பாதுகாப்பு கவசங்களுடன் குன்றில் இருந்து கீழே 'ஸ்கை டைவிங்' செய்து கொண்டாடுகிறார்கள்.

புதுமண ஜோடியுடன் விருந்தினர்களும் சேர்ந்து ஸ்கை டைவிங் செய்து சாகசத்தில் ஈடுபட்டது பார்ப்பவர்களை வேடிக்கையாக இருந்தது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவர், இந்த வீடியோவை மிகவும் விரும்புகிறேன். என் திருமணத்தில் இதை செய்ய விரும்புகிறேன். ஆனால் நான் மிகவும் பயப்படுகிறேன். புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News