தமிழ்நாடு செய்திகள்
"ஹைபிரிட் ராக்கெட்" ஏவும் விழாவில் கால்தவறி கீழே விழுந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
- விழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து, உரையாற்றி விட்டு தனது காருக்கு திரும்பியபோது தவறி விழுந்தார்.
- உடன் சென்ற பாதுகாப்பு அதிகாரிகளும், பாதுகாவலர்களும் பதட்டம் அடைந்து அவரை தூக்கினர்.
இந்தியாவின் முதலாவது ஹைபிரிட் ராக்கெட் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கடலோரத்தில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
அதன் துவக்க விழா இன்று காலை மாமல்லபுரம் அடுத்த தேவநேரி அருகே நடைபெற்றது. விழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து, உரையாற்றி விட்டு தனது காருக்கு திரும்பிய தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான (கூடுதல் பொறுப்பு) டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், கார்பெட் தடுக்கி கால் தவறி கீழே விழுந்தார்.
உடன் சென்ற பாதுகாப்பு அதிகாரிகளும், பாதுகாவலர்களும் பதட்டம் அடைந்து அவரை தூக்கினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.