தமிழ்நாடு செய்திகள்
சாலை ஓரமாக கிடந்த மின் கம்பத்தின் மேல் போடப்பட்ட தார்ச்சாலை
- சாலையின் ஓரமாக போட்டு வைக்கப்பட்டுள்ள புதிய மின்கம்பத்தை அப்புறப்படுத்தாமல் அதன் மேல் தார்ச்சாலை போட்டுள்ளனர்.
- செல்போனில் படம் எடுத்த பொதுமக்கள் சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
காட்டுமன்னார் கோவில்:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே மேல்புளியங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு போடப்பட்ட புதிய சாலை ஓரளவுக்கு தரமாக இருந்து வந்தாலும் சாலையை சுற்றி பார்த்த கிராம மக்கள் ஒரு பகுதிக்கு வந்த போது அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புதிய மாடலில் சாலை அமைக்கும் திட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் புளியங்குடி கிராமத்திலும் இப்படி நடைபெற்றுள்ளதை கண்டு அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர்.
அதாவது புளியங்குடி கிராமத்தில் சாலையின் ஓரமாக போட்டு வைக்கப்பட்டுள்ள புதிய மின்கம்பத்தை அப்புறப்படுத்தாமல் அதன் மேல் தார்ச்சாலை போட்டுள்ளனர். இதனை செல்போனில் படம் எடுத்த பொதுமக்கள் சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.