தமிழ்நாடு

கோப்புபடம். 

கருணாநிதி பிறந்தநாளில் 500 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை

Published On 2023-05-15 04:13 GMT   |   Update On 2023-05-15 04:13 GMT
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த கடைகளை மூடலாம் என்று பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது.
  • 500 கடைகளை கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி முதல் மூடுவதற்கு அரசு ஏற்பாடு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை:

தமிழ்நாட்டில் 5329 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.44 ஆயிரம் கோடி வரை அரசுக்கு வருமானம் கிடைத்து வருகிறது.

இந்த வருமானம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகளை ஒரு இடத்தில் மூடினாலும் இன்னொரு இடத்தில் திறந்து விடுவதாக மக்கள் குறை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் மாநிலம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த மாதம் சட்டசபையில் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த கடைகளை மூடலாம் என்று பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள கோவில்கள் அருகில் இருக்கும் கடைகளை மூடுவது, 500 மீட்டர் சுற்றளவில் 2 கடைகள் இருந்தால் அதில் ஒரு கடையை மூடுவது என்று பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி 500 கடைகளை கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி முதல் மூடுவதற்கு அரசு ஏற்பாடு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News