தமிழ்நாடு

குரோம்பேட்டை நியூ காலனிக்கு பெயர் மாற்றம்- தாம்பரம் மாநகராட்சியில் சிறப்பு தீர்மானம்

Published On 2023-12-01 10:12 GMT   |   Update On 2023-12-01 10:12 GMT
  • தீர்மானத்தை அனைவரும் ஆதரித்து நிறைவேற்றி அரசிதழில் வெளியாவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
  • சிறப்பு தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.

தாம்பரம் மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி துணை மேயர் கோ.காமராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் 2-வது மண்டல குழுத் தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை (தி.மு.க.) சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அதில், தமிழக முதலமைச்சரால் தகைசால் தமிழர் விருது பெற்ற சுதந்திர போராட்ட வீரர் கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவரான ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவருமான என்.சங்கரய்யா கடந்த மாதம் 15-ந்தேதி மரணம் அடைந்தார். மறைந்த என்.சங்கரய்யா மாநகராட்சி-2 பகுதியில் உள்ள குரோம்பேட்டை நியூ காலனியில் கடந்த 40 ஆண்டு காலமாக வசித்து வந்தவர்.

எனவே மறைந்த என். சங்கரய்யாவை என்றென்றும் நினைவு கொள்ளும் வகையில், அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர் வாழ்ந்த குரோம்பேட்டை நியூ காலனி பகுதியை சங்கரய்யா நகர் என்று பெயர் மாற்றம் செய்திட வேண்டும்.

இந்த தீர்மானத்தை அனைவரும் ஆதரித்து நிறைவேற்றி அரசிதழில் வெளியாவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இதையடுத்து இந்த சிறப்பு தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.

Tags:    

Similar News