தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க நிர்வாகிகள் ஊழல் பட்டியலை வெளியிடாதது குறித்து அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும்- தினகரன்

Published On 2023-04-14 11:10 IST   |   Update On 2023-04-14 11:10:00 IST
  • தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
  • திருச்சியில் ஓ. பன்னீர்செல்வம் மாநாடு நடத்துவது குறித்து ஊடகங்கள் வாயிலாக தான் தெரிந்து கொண்டேன்.

தஞ்சாவூர்:

தஞ்சையில் இன்று சட்டமாமேதை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

இன்று தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக அண்ணாமலை கூறியுள்ளார். அந்த ஊழல் பட்டியல் வெளியான பிறகு அது எந்த அளவுக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தும். ஊழல் உண்மையா? இல்லையா ? என்பது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தான் பதில் கூற வேண்டும்.

அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஊழல் பட்டியலை ஏன் வெளியிடவில்லை என நீங்கள் அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தல் குறித்து இந்த ஆண்டு இறுதியில் எங்களது நிலைப்பாடு குறித்து அறிவிப்போம். அடுத்த தமிழ் புத்தாண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லதாக அமையும்.

திருச்சியில் ஓ. பன்னீர்செல்வம் மாநாடு நடத்துவது குறித்து ஊடகங்கள் வாயிலாக தான் தெரிந்து கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News