தமிழ்நாடு

போரூர் அருகே லிப்டில் சிக்கி கர்ப்பிணி உள்பட 7 பேர் தவிப்பு

Update: 2023-06-03 08:42 GMT
  • அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
  • தீயணைப்பு படையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.

போரூர்:

சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் ஜெகதீசன். இவர் நேற்று போரூரை அடுத்த லட்சுமி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

பின்னர் இரவு 7.30மணி அளவில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது தளத்தில் இருந்து ஜெகதீசன் உள்பட 7பேர் லிப்ட் மூலம் தரை தளத்திற்கு வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த லிப்ட் தரை தளத்திற்கு கீழே சென்று திடீரென நின்று விட்டது. இதனால் ஜெகதீசன் மற்றும் கர்ப்பிணி பெண் உள்பட அவரது குடும்பத்தினர் 7பேரும் லிப்டில் சிக்கி தவித்து கூச்சலிட்டனர். தீயணைப்பு படையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.

Tags:    

Similar News