தமிழ்நாடு செய்திகள்

சீனாவிற்கு கொடுக்க வேண்டிய கடனால் இலங்கை பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது- செந்தில் தொண்டமான் பேட்டி

Published On 2022-12-29 11:40 IST   |   Update On 2022-12-29 15:37:00 IST
  • இலங்கை பொருளாதார வீழ்ச்சியின் போது மனிதாபிமான அடிப்படையில் பிற நாடுகளை விட இந்தியா அதிகம் உதவிகள் செய்துள்ளது.
  • சேது சமுத்திர திட்டம் குறித்து இந்தியா தான்முடிவு செய்ய வேண்டும்.

திருப்பத்தூர்:

திருப்பத்தூரில் இலங்கையின் முன்னாள் முதல்-அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தலைவர் செந்தில் தொண்டமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கை பொருளாதார வீழ்ச்சியின் போது மனிதாபிமான அடிப்படையில் பிற நாடுகளை விட இந்தியா அதிகம் உதவிகள் செய்துள்ளது. இதனால் இலங்கை-இந்திய உறவு மேலும் பலப்பட்டுள்ளது. இலங்கையில் டாலர் தட்டுபாடு நிலவி உள்ளதால், பிற நாட்டு கரன்சிகளை பயன்படுத்த அனுமதி வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஐ.எம்.எப். நிதி கிடைத்தால் இலங்கை இன்னும் இரு ஆண்டுகளில் பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது. மேலும் உள்நாட்டு போருக்கு பிறகு இலங்கை அபிவிருத்தி திட்டங்களுக்கு சீனா அதிக அளவு முதலீடு செய்தது.

சீனாவிற்கு அதிகளவு வட்டி கட்ட வேண்டி இருந்த காரணத்தினால், இலங்கை பொருளாதாரம் வீழ்ச்சியடைய காரணமாக அமைந்தது. சேது சமுத்திர திட்டம் குறித்து இந்தியா தான்முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது ஜல்லிக்கட்டு மாநில இளைஞர் அணி தலைவர் ராஜேஷ் உடனிருந்தார்.

Similar News