தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் தேர்வு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் ஆலோசனை

Published On 2022-12-20 15:48 IST   |   Update On 2022-12-20 15:48:00 IST
  • தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்தம் 11 ஆகும்.
  • கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை:

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்தம் 11 ஆகும். இதில் 2 உறுப்பினர்களுக்கான இடங்கள் காலியாக உள்ளது.

இந்த பதவிக்கு தகுதியானவர்களை நியமிக்க மாநில மனித உரிமைகள் ஆணையச் சட்டப்படி முதல்-அமைச்சர், சபாநாயகர் அடங்கிய குழு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க பரிந்துரை செய்யும்.

அந்த வகையில் 2 இடங்களுக்கான மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஆலோசனை வழங்கினார். அவருடன் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News