தமிழ்நாடு

ஜி.கே.வாசன் பற்றி விமர்சனம்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு த.மா.கா. கண்டனம்- 'ஈரோடு தேர்தலில் கெஞ்சியது மறந்ததா?'

Published On 2023-07-22 08:45 GMT   |   Update On 2023-07-22 08:45 GMT
  • கடந்த 15-ந்தேதி ஈரோட்டில் நடந்த த.மா.கா. பொதுக் கூட்டத்தில் 20 ஆயிரம் பேர் பங்கேற்றார்கள்.
  • அரசியல் நாகரீகம் இல்லாத அரசியல் தலைவர் இளங்கோவனுக்கு நாவடக்கம் தேவை.

சென்னை:

காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை விமர்சித்ததற்கு த.மா.கா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநில துணை தலைவர் விடியல் சேகர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 15-ந்தேதி ஈரோட்டில் நடந்த த.மா.கா. பொதுக் கூட்டத்தில் 20 ஆயிரம் பேர் பங்கேற்றார்கள். அதை தாங்கி கொள்ள முடியாமல் நிலை தடுமாறி பேசியது கண்டிக்கத்தக்கது. அரசியல் நாகரீகம் இல்லாத அரசியல் தலைவர் இளங்கோவனுக்கு நாவடக்கம் தேவை.

ஈரோடு மற்றும் திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டபோது ஜி.கே.வாசன் பிரசாரத்துக்கு வர வேண்டும் என்று கெஞ்சியதை காலம் மாறியதும் மறக்கலாமா?

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News