தமிழ்நாடு செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் உண்ணாவிரதம் இருந்த காட்சி.

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களை கண்டித்து தீட்சிதர் திடீர் உண்ணாவிரதம்

Published On 2022-11-19 14:40 IST   |   Update On 2022-11-19 14:40:00 IST
  • நடராஜ தீட்சிதர், பொது தீட்சிதர்கள் அலுவலகம் முன்பு இன்று உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
  • கோவில் பொது தீட்சிதர்களை கண்டித்து தீட்சிதர் ஒருவரே உண்ணாவிரத போராட்டம் நடத்தியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் தர்ஷன் என்கிற நடராஜ தீட்சிதர். இவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனகசபை மீது ஏறிய விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எனவே அவருக்கு கோவில் பணி வழங்காமல் இருந்தது.

இந்த நிலையில் தனக்கு கோவில் பணி வழங்கவேண்டும், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், கோவில் தீட்சிதர்களை கண்டித்தும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை நடராஜ தீட்சிதர், பொது தீட்சிதர்கள் அலுவலகம் முன்பு இன்று உண்ணாவிரதத்தை தொடங்கினார். அப்போது தீட்சிதர்களுக்கு எதிராக கோஷமிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த சிதம்பரம் டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கோவில் பொது தீட்சிதர்களை கண்டித்து தீட்சிதர் ஒருவரே உண்ணாவிரத போராட்டம் நடத்தியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News