தமிழ்நாடு செய்திகள்

நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: தமிழக-கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு

Published On 2023-09-13 10:44 IST   |   Update On 2023-09-13 10:44:00 IST
  • கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • நிபா வைரஸ் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

உடுமலை:

நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் நோய் தமிழகத்தில் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதையொட்டி திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ள ஒன்பதாறு சோதனைச் சாவடியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளதா? என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு எந்த இடத்திலும் இல்லை. ஆனாலும் தமிழக-கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நிபா வைரஸ் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்றனர்.

Tags:    

Similar News