தமிழ்நாடு

காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை

Published On 2022-11-18 06:44 GMT   |   Update On 2022-11-18 06:44 GMT
  • கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2020-21, 2021-22-ம் ஆண்டு பட்டம் பெற்ற மாணவிகளுக்கு ஜனவரி மாதம் பட்டமளிப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் அமைந்துள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழா கடந்த 11-ந்தேதி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு 2018-2019, 2019-2020-ம் ஆண்டு பட்டம் முடித்த மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2020-21, 2021-22-ம் ஆண்டு பட்டம் பெற்ற மாணவிகளுக்கு ஜனவரி மாதம் பட்டமளிப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பிரதமர் மோடி பட்டமளிப்பு விழா நடத்தி சென்றுள்ள நிலையில் தற்போது காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி வருகை தருவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதற்காக உறுதியான தகவல் இன்னும் வெளிவராத நிலையில் இன்னும் ஓரிருநாளில் அதற்கான அறிவிப்பு வெளிவரும் என்று தெரிகிறது.

ஜனாதிபதியாக பதியேற்ற பிறகு முதன்முறையாக தமிழகத்திற்கு குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு வருகை தர உள்ளதால் மாணவ-மாணவிகள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News