தமிழ்நாடு செய்திகள்
கனமழை எதிரொலி- தமிழகத்தில் தட்டச்சு தேர்வுகள் ஒத்திவைப்பு
- நாளையும், நாளை மறுநாளும் தட்டச்சு தேர்வுகள் நடைபெற இருந்தது.
- கனமழை காரணமாக இந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
சென்னை:
தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டு தோறும் இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளையும், நாளை மறுநாளும் தட்டச்சு தேர்வுகள் நடைபெற இருந்தது. கனமழை காரணமாக இந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள் வருகிற 19, 20-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தட்டச்சு தேர்வு வாரிய தலைவர் அறிவித்துள்ளார்.