தமிழ்நாடு செய்திகள்

பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோவிலில் அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம்

Published On 2023-07-23 17:48 IST   |   Update On 2023-07-23 17:48:00 IST
  • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
  • அமைச்சர் சேகர்பாபு நேற்று இரவு பவானி அம்மன் கோவிலுக்கு வந்து தங்கி இருந்தார்.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் உள்ள ஆரணி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற சுயமாக உருவான அருள்மிகு பவானி அம்மன் திருக்கோவில் உள்ளது.

இக்கோவிலில் 14 வாரங்கள் ஆடித்திருவிழா நடைபெறும். இந்நிலையில், பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற இக்கோவிலுக்கு சனிக்கிழமை இரவு குடும்பத்துடன் வந்து தங்கி இருந்து ஞாயிற்றுக்கிழமை தங்களது நேர்த்தி கடனை செலுத்தி விட்டு செல்வர்.

இந்நிலையில் இன்று ஆடி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு தங்களது நேர்த்தி கடனை செலுத்தி விட்டு சென்றனர்.

தர்ம தரிசனம், கட்டண தரிசனம், சிறப்பு தரிசனம் உள்ளிட்ட பல்வேறு தரிசன வரிசைகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று இரவு இக்கோவிலுக்கு வந்து தங்கி இருந்தார். இன்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டு சென்றார். திருக்கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த அவருக்கு கோவில் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News