தமிழ்நாடு

விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்- அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

Published On 2023-04-05 08:12 GMT   |   Update On 2023-04-05 08:12 GMT
  • 24 மணி நேரம் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்பது முதலமைச்சரின் உத்தரவாக உள்ளது.
  • மின் பகிர்மானத்திற்கான அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய சிவகங்கை சட்ட மன்ற உறுப்பினர் செந்தில் நாதன், சிவகங்கை மிக வறட்சியான மாவட்டமாக உள்ளது.

இங்குள்ள விவசாயிகளின் நீர் ஆதாரம் நிலத்தடி நீர் தான். விவசாயத்திற்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 18 மணி நேர மின்சாரம் என்பது 24 மணி நேரம் மும்முனை மின்சாரமாக வழங்கப்பட வேண்டும்.

மேலும் விவசாய காலத்தில் ஆழ்துளை கிணறு வைத்திருப்பவர்களிடம், அருகில் இருக்கும் நிலத்தை சேர்ந்தவர்கள் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலையில் உள்ளதால் அதற்கு கட்டணம் கட்டுவதற்கு அவர்கள் தயாராக உள்ளனர், எனவே அது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, '24 மணி நேரம் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்பது முதலமைச்சரின் உத்தரவாக உள்ளது. மின் பகிர்மானத்திற்கான அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

விரைவில் பணி முடிந்ததும் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார்.

மேலும், சிவகங்கை தொகுதியில் 3,232 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மற்ற கோரிக்கை குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலிக்கப்படும்' என்றார்.

Tags:    

Similar News