தமிழ்நாடு

4403 காலிப்பணியிடம் அரசியல் தலையீடு இல்லாமல் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படுவர்- அமைச்சர் பெரியசாமி

Published On 2022-09-30 09:46 GMT   |   Update On 2022-09-30 09:46 GMT
  • 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலும் நேர்முகத் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் பணி நியமனம் செய்யப்படும்.
  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கால விதிமுறை ஊதியத்தின் அடிப்படையிலேயே நியமிக்கப்படுவார்கள்

திண்டுக்கல்:

தமிழகத்தில் ரேசன் கடைகளில் காலியாக உள்ள 4403 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளது. விற்பனையாளர், எடையாளர் ஆகிய 2 பணிகளுக்கு தேர்வு செய்வதற்காக கூட்டுறவுத்துறை மூலம் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விற்பனையாளருக்கு ரூ.8500 சம்பளம், எடையாளருக்கு ரூ.6500 சம்பளம் தொகுப்பூதியம் மூலம் பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளது. இட ஒதுக்கீட்டின் பேரிலும் சமூக நீதி அடிப்படையிலும் சமமாக எல்லோருக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலும் நேர்முகத் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் பணி நியமனம் செய்யப்படும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கால விதிமுறை ஊதியத்தின் அடிப்படையிலேயே நியமிக்கப்படுவார்கள். இது கடைசி மட்ட பணி என்பதால் கூட்டுறவுத்துறை மூலம் தேர்வு நடைபெறுகிறது. இந்த பணி நியமனத்தில் அரசியல் தலையீடு இருக்காது. வருவாய்த்துறை, சிவில் சப்ளை அதிகாரிகள் கூட்டுறவுத்துறை மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் சார்பில் தேர்வு நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News