தமிழ்நாடு

கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி ஒரு ஆண்டில் நிறைவு பெறும்- அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

Published On 2023-05-24 09:22 GMT   |   Update On 2023-05-24 09:22 GMT
  • குளிர்சாதன வசதி கொண்ட படகில் பயணம் செய்ய ரூ.450 வீதமும் சாதாரண படகில் பயணம் செய்யரூ.350 வீதமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
  • பாலம் அமைக்கும் பணி இன்னும் ஓராண்டுக்குள் நிறைவுபெறும்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் இன்று அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இந்த 2 படகுகளிலும் தற்போது சுற்றுலா பயணிகள் கடலில் உல்லாச சவாரி செய்யும் வகையில் இன்று முதல் இயக்கப்பட்டுஉள்ளது. இந்த படகுகளில் குளிர்சாதன வசதிகளும் செய்யப்பட்டுஉள்ளது.

இதில் குளிர்சாதன வசதி கொண்ட படகில் பயணம் செய்ய ரூ.450 வீதமும் சாதாரண படகில் பயணம் செய்யரூ.350 வீதமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் திருவள்ளுவர் சிலை இடையேரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழையினால் பாலம் அமைக்கும்பணி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டுஉள்ளது. இந்த பாலம் அமைக்கும் பணி இன்னும் ஓராண்டுக்குள் நிறைவுபெறும்.

இவ்வாறு அமைச்சர் எ.வ. வேலு கூறினார்.

Tags:    

Similar News