தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 883 கன அடியாக சரிவு

Published On 2023-01-20 12:31 IST   |   Update On 2023-01-20 12:31:00 IST
  • அணையிலிருந்து காவிரி ஆற்றில் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
  • அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

மேட்டூர்:

கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நேற்று விநாடிக்கு 1022 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 883 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையிலிருந்து காவிரி ஆற்றில் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

நேற்று விநாடிக்கு 108.37 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை மேலும் சரிந்து 107.79 அடியானது. இதனால் இனிவரும் நாட்களில் நீர்வரத்து இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News