தமிழ்நாடு செய்திகள்

கத்தியை காட்டி பயணிகளிடம் ரகளை- 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை

Published On 2023-12-16 12:47 IST   |   Update On 2023-12-16 12:47:00 IST
  • மாமல்லபுரம் போலீசார் ஆட்டோவை துரத்தி சென்றனர்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம்:

சென்னை திருவொற்றியூர் கொருக்குபேட்டை பகுதியை சேர்ந்த சுரேந்தர் வயது 25, விஜய் வயது 23, சேகர் வயது 23 மூவரும் நண்பர்கள், இவர்கள் மாமல்லபுரத்தில் ரூம் எடுத்து தங்கியிருந்து ஹோட்டல்களில் நடக்கும் ஈவெண்ட்களில் கேட்டரிங் வேலை செய்து வருகின்றனர்.

சென்னை செல்வதற்காக மாமல்லபுரம் இ.சி.ஆர் பஸ் நிறுத்தத்திற்கு ஆட்டோவில் கஞ்சா போதையில் வந்து இறங்கினர். பணம் தகராறில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கி விரட்டி அடித்தனர். பின்னர் அங்கு வந்த பஸ்ஸில் ஏறுவது போல் நடித்து, ஏற முயன்ற பயணி ஒருவரின் செல்போனை பறித்துள்ளனர்.


இதனால் பயணிக்கும் அவர்களுக்கும் பஸ் நிறுத்தத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. சக பயணிகள் அவர்கள் மூவரையும் கண்டித்ததால் ஒருவன் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி பயணிகள் அனைவரையும் மிரட்டி ரகளையில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கு வந்த இ.சி.ஆர் ஆட்டோ ஸ்டான்ட் ஆணந்தன் என்பவரது ஆட்டோவை அடித்து நிறுத்தி அவரை மிறட்டி தப்பி ஓட முயற்சித்தனர். தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார் ஆட்டோவை துரத்தி சென்றனர். ஆட்டோவில் இருந்து இறங்கி ஓட முயன்ற மூன்று பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News