தமிழ்நாடு

எப்போது ராமேசுவரம் செல்வோம்?- விபத்தில் உயிர் தப்பிய சிறுவனின் கேள்வியால் திணறிய உறவினர்கள்

Published On 2023-08-27 06:04 GMT   |   Update On 2023-08-27 06:04 GMT
  • லேசான காயமடைந்தவர்களை மீட்டு ரெயில்வே ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
  • அமைச்சர் மூர்த்தி அந்த சிறுவனுக்கு காலணி மற்றும் உணவுப் பொருட்கள் வாங்கி கொடுத்தார்.

மதுரை:

மதுரை ரெயில் நிலையத்தில், உத்தரப்பிரதேசத்தில் ஆன்மீக சுற்றுலா வந்தவர்கள் தங்கியிருந்த ரெயில் பெட்டியில் ஏற்பட்ட பயங்க தீ விபத்தில் 9 பேர் பலியானார்கள். லேசான காயமடைந்தவர்களை மீட்டு மதுரை ரெயில்வே ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

அப்போது தனது தாத்தா, பாட்டியுடன் பல்வேறு புண்ணிய ஸ்தலங்களுக்கு சுற்றுலா செல்வதற்காக வந்த 4 வயது சிறுவன் ஸ்வேதாஸ் சுக்லா நடந்த நிகழ்வுகள் தெரியாமல் எப்போது ராமேசுவரம் செல்வோம்? என்னை ராமேசுவரம் அழைத்து செல்லுங்கள், நான் ராமேசுவரத்தை பார்க்க வேண்டும் என கூறியது அங்கிருந்தவர்களின் மனதை உருக்குவதாக அமைந்தது.

மேலும் ரெயில் விபத்தில் சிறுவன் அணிந்திருந்த காலணி ரெயிலில் சிக்கிக் கொண்டது. இதனைப் பார்த்த அமைச்சர் மூர்த்தி அந்த சிறுவனுக்கு காலணி மற்றும் உணவுப் பொருட்கள் வாங்கி கொடுத்தார். அமைச்சர் மூர்த்தியின் இச்செயல் அங்கிருந்தவர்களை நெகழ்ச்சி அடைய செய்தது.

Tags:    

Similar News