தமிழ்நாடு

பூதாகரமாக வெடித்த சர்ச்சை: மன்னிப்பு கோரிய இர்பான்

Published On 2024-05-22 04:17 GMT   |   Update On 2024-05-22 05:37 GMT
  • வாட்ஸ்அப் மற்றும் இ-மெயில் மூலம் விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
  • சட்ட நடவடிக்கைகள் தொடரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவியூ செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.

இந்நிலையில் யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்தார். அதோடு துபாயில் பரிசோதனை செய்து, தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்து யூடியூப்பில் கொண்டாட்ட வீடியோவை வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நேற்று வாட்ஸ்அப் மற்றும் இ-மெயில் மூலம் விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.


இந்நிலையில், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை வீடியோவாக வெளியிட்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அதற்கு மன்னிப்பு கோரியுள்ளார் இர்பான்.

தன்னை தொடர்பு கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இர்பான் மன்னிப்பு கோரியுள்ளார். மன்னிப்பு கோரிய வீடியோவை வெளியிட உள்ளதாகவும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே சட்ட நடவடிக்கைகள் தொடரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News