தமிழ்நாடு

காஞ்சிபுரம், திருவள்ளூர்- செங்கல்பட்டு மாவட்டங்களில் சுதந்திர தின விழா: கலெக்டர்கள் தேசிய கொடி ஏற்றி நலத்திட்ட உதவி

Published On 2022-08-15 08:12 GMT   |   Update On 2022-08-15 08:12 GMT
  • காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியினை மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது மாநகராட்சி கமிஷனர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
  • காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள மாவட்ட கூட்டுறவுத் துறையின் சார்பில் மண்டல இணை பதிவாளர் லட்சுமி தேசிய கொடி ஏற்றினார்.

காஞ்சிபுரம்:

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதே போல் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலும் சிறப்பாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அண்ணா காவல் அரங்கத்தில் தேசியக் கொடியினை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து ரூ.1 கோடியே 19 லட்சத்து 92 ஆயிரத்து 239 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

விழாவில் காஞ்சிபுரம் டி.ஐ.ஜி. சத்யபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா, முதன்மை கல்வி அலுவலர் கலைச்செல்வி, தாசில்தார் பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியினை மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது மாநகராட்சி கமிஷனர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள மாவட்ட கூட்டுறவுத் துறையின் சார்பில் மண்டல இணை பதிவாளர் லட்சுமி தேசிய கொடி ஏற்றினார்.

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் வங்கி தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

செங்கல்பட்டில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசார் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து பள்ளி மாணவிகளின் கண்கவர் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிறந்த காவலருக்கான மற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு விருதுகளை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உள்பட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை மாவட்ட நீதிபதி காயத்ரி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

இதில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் குமார், செயலாளர் மகேஷ் குமார், பொருளாளர் பிரேம் மற்றும் மூத்த வக்கீல்கள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு நகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் தேசிய கொடியை ஏற்றினார். எம்.எல்.ஏ வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கினார். நகர மன்ற துணை தலைவர் அன்பு செல்வன், நகராட்சி ஆணையர் மல்லிகா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து வண்ண பலூன் மற்றும் சமாதான புறாவை பறக்கவிட்டார். பின்னர் அவர் போலீசரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளின் மூலம் ரூ.1 கோடியே 24 லட்சத்து 81 ஆயிரத்து 804 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

மேலும் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 20 காவலர்களுக்கு பதக்கமும் நற்சான்றிதழும் வழங்கினார். இதேபோல் பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் போலீஸ் சூப்பிரெண்ட் சீப்பாஸ் கல்யாண், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் , மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் ஜெயகுமார், சப்- கலெக்டர் மகாபாரதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மீனாட்சி, ஜேசுதாஸ்,, வட்டாட்சியர் செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் அரசு அலுவலர்கள் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் செந்தில்குமாரும், திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமியும் தேசியக் கொடியை ஏற்றினர். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து அலுவலர் மோகன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் ரவி தேசிய கொடி ஏற்றினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ராமகிருஷ்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர். அத்திப்பட்டு ஊராட்சியில் தலைவர் சுகந்தி வடிவேல், வல்லூர் ஊராட்சியில் தலைவர் உஷா ஜெயகுமார், தட பெரும்பாக்கம் ஊராட்சியில் தலைவர்பாபு, பஞ்சட்டி ஊராட்சியில் தலைவர் சீனிவாசன், ஜெகநாதபுரம் ஊராட்சியில் தலைவர் மணிகண்டன், தாங்கள் பெரும்புலம் ஊராட்சியில் தலைவர் ஞானவேல், கோலூர் ஊராட்சியில் தலைவர் குமார், பிரளயம்பாக்கம் ஊராட்சியில் தலைவர் இலக்கியா கண்ணதாசன், ஆவூர் ஊராட்சியில் தலைவர் டில்லி பாபு ஆகியோர் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினர்.

மாமல்லபுரத்தில் தொடர்ந்து 3 நாட்களாக வீடுதோறும் தேசியக்கொடி இலவசமாக கொடுக்கப்பட்டது.

அர்சுனன்தபசு அருகே தன்னார்வலர்கள் 1,000 பேர் ஒன்று திரண்டு தேசியக் கொடியின் மூவர்ண கலரில் டீ-சர்ட் அணிந்து ஊர்வலம் சென்றனர்.

பூஞ்சேரி டோல்கேட் ஓ.எம்.ஆர் சாலையில் இருந்து பண்டிதமேடு வரை சுதந்திர தின மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதனை இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகம், மாமல்லபுரம் கலங்கரை விளக்கம், தொல்லியல்துறை, தீயணைப்பு துறை, மாமல்லபுரம் பேரூராட்சியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

ஊத்துக்கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தமிழ்ச்செல்வன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். வக்கீல்கள் சங்க தலைவர் சீனிவாசன், செயலாளர் மகேந்திரன், பொருளாளர் கன்னியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி. அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தேசிய கொடியை ஏற்றினார். போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ரமேஷ் கொடியேற்றினார். இதில் சிறப்பு தாசில்தார் லதா, துணை தாசில்தார் நடராஜன், வட்ட வழங்கல் அலுவலர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சித் தலைவர் அப்துல் ரஷீத் தேசிய கொடி ஏற்றினார். செயல் அலுவலர் மாலா, துணைத்தலைவர் குமரவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News