தமிழ்நாடு

தூத்துக்குடி கடற்கரையில் பீடி இலை மூட்டைகளை கடத்த முயன்ற கும்பல்- போலீசாரை கண்டதும் தப்பி ஓட்டம்

Published On 2023-09-20 07:05 GMT   |   Update On 2023-09-20 07:05 GMT
  • கடலில் ஒரு படகு நீண்ட தொலைவில் செல்வதையும் போலீசார் கண்டனர்.
  • மூட்டைகள் முழுவதும் பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி தாளமுத்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாளமுத்துநகர் மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் நின்று கொண்டிருந்தனர்.

உடனே போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். போலீஸ் வாகனம் வருவதை கண்ட அந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த 3 மூட்டைகளை கடற்கரையில் போட்டு விட்டு அவர்கள் வந்திருந்த வாகனத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

மேலும் கடலில் ஒரு படகு நீண்ட தொலைவில் செல்வதையும் போலீசார் கண்டனர். அதனைத்தொடர்ந்து போலீசார் மூட்டைகளை சோதனை செய்தனர். அதில் மூட்டைகள் முழுவதும் பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது. அவை கடத்தலுக்கு பயன்படுத்த கொண்டு செல்லப்பட இருந்த நேரத்தில் போலீசார் வருவதை தெரிந்ததும் ஒரு பகுதியை கடற்கரையோரம் போட்டுவிட்டு அவர்கள் தப்பி சென்றது தெரிய வந்தது. பிடிபட்ட பீடி இலை மூட்டைகளை கைப்பற்றிய போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்? அவர்கள் எங்கு கடத்த முயன்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News