தமிழ்நாடு செய்திகள்
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சஞ்சய் ராமசாமி பா.ஜனதாவில் இணைந்தார்- அண்ணாமலை வாழ்த்து
சஞ்சய் ராமசாமிக்கு பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை:
சென்னை உயர்நீதி மன்றத்தின் மூத்த வக்கீலான சஞ்சய் ராமசாமி தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாரதிய ஜனதாவில் இணைந்தார்.
கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள சஞ்சய் ராமசாமி காங்கிரஸ் கட்சியின் சார்பாக 1991-ம் ஆண்டு விருதுநகர் சட்ட மன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சஞ்சய் ராமசாமிக்கு பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார்.