தமிழ்நாடு செய்திகள்

விளாத்திகுளத்தில் நடுக்காட்டில் இளம்பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட போலீஸ்காரர்

Published On 2023-07-26 14:10 IST   |   Update On 2023-07-26 14:10:00 IST
  • போலீஸ்காரரின் சர்ச்சை வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
  • பொதுமக்கள் மற்றும் போலீஸ் வட்டாரங்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

விளாத்திகுளம்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கே.சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் கடந்த 2009-ம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்து பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்த நிலையில் தற்போது விளாத்திகுளம் போலீஸ் டி.எஸ்.பி. முகாம் அலுவலகத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் அவர், இளம்பெண் ஒருவருடன் தனிமையில் அவர் லீலையில் ஈடுபட்டுள்ளார். அப்போது சிலர் வீடியோ எடுப்பதை கண்டு பயந்து ஓடும் காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் தற்போது பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோ காட்சியில் முதல்நிலை காவலர் ராஜேந்திரன், டி-சர்ட் மற்றும் லுங்கி அணிந்து கொண்டும், அருகில் சுடிதார் அணிந்து துப்பட்டாவைக் கொண்டு முகத்தை மூடியபடி இளம்பெண் ஒருவரும் உள்ளனர்.மர்ம நபர்கள் இவர்களை வீடியோ எடுப்பதை கண்டதும் அவர்கள் 2 பேரும் பயந்து ஓடுவது போன்றும், ஆனால் அந்த மர்ம நபர்கள் விடாமல் பின்தொடர்ந்து வீடியோ பதிவு செய்த காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

கடந்த சில நாட்களாகவே விளாத்திகுளம் போலீஸ் உட்கோட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பலர் பாலியல் புகார்களில் சிக்கி, ஒழுங்கு நடவடிக்கை காரணமாக ஆயுதப்படைக்கும், வேறு போலீஸ் நிலையங்களுக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு போலீஸ்காரரின் சர்ச்சை வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருப்பது பொதுமக்கள் மற்றும் போலீஸ் வட்டாரங்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News