தமிழ்நாடு

காங்கிரஸ் கட்சியினருக்கு தேசிய கொடியை பிடிக்கவும், திருப்பி பிடித்து தடியாக மாற்றவும் தெரியும்- ஈவிகேஎஸ் இளங்கோவன்

Published On 2022-08-14 09:26 GMT   |   Update On 2022-08-14 09:26 GMT
  • நங்கநல்லூர் பகுதியில் இருந்து ஆதம்பாக்கம் வரை காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை பேரணி.
  • தமிழக மக்கள் பொங்கி எழுந்தால் நீங்கள் பஸ்பமாகி விடுவீர்கள்.

ஆலந்தூர்:

நங்கநல்லூர் பகுதியில் இருந்து ஆதம்பாக்கம் வரை காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை பேரணி நடை பெற்றது.

தென் சென்னை மேற்கு மாவட்டதலைவர் நாஞ்சில் பிரசாத் தலைமை தாங்கினார். பாதயாத்திரை பேரணியை முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவின் 75 - வது சுதந்திர தின பவள விழாவிற்கு காங்கிரஸ்காரர்கள் தான் சொந்தகாரர்கள். தேசத்திற்கு துரோகம் செய்தவர்கள், மூவர்ண கொடியை தூக்கி கொண்டு இருக்கிறார்கள்.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காரில் தேசியக்கொடியை கட்டி செல்கிறார். அவர் மீது பா.ஜனதாவினர் செருப்பு வீசுகிறார்கள். தேசிய கொடி மீது மரியாதை இருந்திருந்தால் செருப்பை வீசி இருப்பார்களா?

பா.ஜனதாவினர் ரவுடி தனத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக மக்கள் பொங்கி எழுந்தால் நீங்கள் பஸ்பமாகி விடுவீர்கள். நாட்டை காப்பாற்றுகின்ற தாய் கட்சி காங்கிரஸ். அதனால் தான் சொல்கிறேன், தேச துரோக புழுக்களை அழிக்க நாங்கள் ஆயுதம் ஏந்தவும் தயங்க மாட்டோம்.

காங்கிரஸ் கட்சிகாரர்களுக்கு கொடியை பிடிக்கவும் தெரியும், கொடியை திருப்பி பிடித்து தடியாக மாற்றவும் தெரியும்.

பெருந்தலைவர் காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, அவரது வீட்டிற்கு தீவைத்தவர்கள் இந்த கொள்ளைக்காரர்கள். இன்று காமராஜரை புகழ்ந்து பேசுகிறார்கள். தேசிய கொடியை ஏற்றுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் நாசே. ராமச்சந்திரன், பொன். கிருஷ்ண மூர்த்தி, டி.செல்வம், ரங்க பாஷ்யம், தளபதி பாஸ்கர், வி. சிவராமன், கவுன்சிலர் மோ.பானுபிரியா,அய்யம் பெருமாள், ஆலந்தூர் பகுதி தலைவர்கள் தனசேகரன், வி.ரமேஷ்,முகப்பேர் ஜி‌.பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News