தமிழ்நாடு செய்திகள்
வாணியம்பாடியில் சிக்னல் கோளாறால் டபுள் டக்கர் ரெயில் நிறுத்தம்
- ரெயிலை என்ஜின் டிரைவர் இயக்க முற்பட்டபோது சிக்னல் கோளாறு ஏற்பட்டது.
- பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
ஜோலார்பேட்டை:
சென்னையிலிருந்து-பெங்களூரு சென்று கொண்டிருந்த டபுள் டக்கர் ரெயில் வாணியம்பாடி ரெயில் நிலையத்திற்கு 10. 32 க்கு வந்தது.
பின்னர் ரெயிலை என்ஜின் டிரைவர் இயக்க முற்பட்டபோது சிக்னல் கோளாறு ஏற்பட்டது. சிக்னல் கிடைக்காததால் ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.
பின்னர் இதை சரி செய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதையடுத்து 20 நிமிடங்கள் தாமதமாக 10.52-க்கு பெங்களூருக்கு டபுள் டக்கர் ரெயில் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.