தமிழ்நாடு

யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் முடிவு- தினகரன்

Published On 2023-12-16 08:19 GMT   |   Update On 2023-12-16 08:19 GMT
  • வருகிற தேர்தலில் நான் நிற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
  • நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது மத்திய அரசின் கடமை.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் இன்று 10 மாவட்டங்களிலுள்ள அ.ம.மு.க சட்டப்பேரவைத் தொகுதிகளின் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

வருகிற பாராளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி மாதத்தில் முடிவு செய்யப்படும். தஞ்சாவூர் தொகுதியில் நான் நிற்பதாகக் கூறுவது ஊக அடிப்படையிலான தகவல். வருகிற தேர்தலில் நான் நிற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.


நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது மத்திய அரசின் கடமை. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எம்.பி.க்களை இடை நீக்கம் செய்தது சரியான நடவடிக்கை இல்லை. இந்த நடவடிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

சென்னை பேரிடர் தொடர்பாக தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை. காவிரி என்பது தமிழ்நாட்டுக்கு ஜீவாதார பிரச்சனை. மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாகிவிடும். இது சட்டத்துக்கு புறம்பானது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News