தமிழ்நாடு செய்திகள்

ஆலங்குளம் அருகே சாலையில் சிதறிக்கிடந்த ரூ.1.80 லட்சத்தை போலீசில் ஒப்படைத்த தம்பதி

Published On 2023-06-14 11:17 IST   |   Update On 2023-06-14 11:17:00 IST
  • பணத்தை ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த எழுத்தர் முருகனிடம் ஜெயபிரகாஷ் ஒப்படைத்தார்.
  • தம்பதியின் நேர்மையை அங்கிருந்த போலீசார் பாராட்டினர்.

தென்காசி:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சாலைப்புதூரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 35). இவர் நேற்று இரவு நெல்லை-தென்காசி 4 வழிச்சாலையில் ஆலங்குளத்தை அடுத்த நல்லூர் விலக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே மோட்டார் சைக்கிளில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த சாலையில் ரூ.500 நோட்டுகள் சிதறிக்கிடந்தன. உடனே மோட்டார் சைக்கிளை நிறுத்திய ஜெயபிரகாஷ் அந்த ரூபாய் நோட்டுகளை மனைவியுடன் சேர்ந்த சேகரித்தார். தொடர்ந்து அந்த பணத்தை எண்ணிப் பார்த்ததில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது.

இதையடுத்து அந்த பணத்தை ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த எழுத்தர் முருகனிடம் ஜெயபிரகாஷ் ஒப்படைத்தார். அந்த தம்பதியின் நேர்மையை அங்கிருந்த போலீசார் பாராட்டினர். மேலும் இந்த பணத்திற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து சம்பந்தப்பட்டவர்கள் வந்து பெற்றுக்கொள்ளலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News