தமிழ்நாடு செய்திகள்
போக்குவரத்து கழகங்களில் காலி இடத்தை நிரப்ப கோரி சி.ஐ.டி.யூ. வேலைநிறுத்த நோட்டீசு
- நிரந்தர பணியிடங்களிலும் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க கூடாது என்று வலியுறுத்தி உள்ளனர்.
- மாதம் 3-ந் தேதி அல்லது அதற்கு பின்பு 6 வார காலத்திற்குள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளனர்.
சென்னை:
அரசு போக்குவரத்து கழகங்களில் ஏராளமான காலி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இந்த நிலையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. தொழிற் சங்கம் வேலைநிறுத்த நோட்டீசு வழங்கி உள்ளது. நிரந்தர பணியிடங்களிலும் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க கூடாது என்று வலியுறுத்தி உள்ளனர்.
அடுத்த மாதம் 3-ந் தேதி அல்லது அதற்கு பின்பு 6 வார காலத்திற்குள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளனர்.