தமிழ்நாடு

கண்டோன்மென்ட் பல்லாவரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பேசுகிறார்

Published On 2023-05-07 05:43 GMT   |   Update On 2023-05-07 05:43 GMT
  • திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க மாபெரும் பொதுக் கூட்டம் இன்று மாலை 6 மணி அளவில் தெரசா பள்ளி அருகில் நடைபெற உள்ளது.
  • காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து மாநகர பகுதி ஒன்றிய நகர, பேரூர், சிற்றூர்களில் இருந்தும் கழக தோழர்கள் அனைவரும் பல்லாயிரக்கணக்கில் அணி திரண்டு பங்கேற்க உள்ளனர்.

சென்னை:

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க மாபெரும் பொதுக் கூட்டம் இன்று (ஞாயிறு) மாலை 6 மணி அளவில் கண்டோன்மென்ட் பல்லாவரம், ராஜேந்திர பிரசாத் சாலை, தெரசா பள்ளி அருகில் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் தா.மோ.அன்பரசன் இக்கூட்டத்திற்கு தலைமை வகிக்கிறார். மாவட்ட கழக அவைத் தலைவர் த.துரைசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் இ.கருணாநிதி எம்.எல்.ஏ, வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ, து.மூர்த்தி, மற்றும் மாவட்ட பொருளாளர் வெ. விசுவநாதன், ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இம்மாபெரும் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றுகிறார்.

கழக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை தீர்மானக் குழு செயலாளர் மீ.அ.வைத்திய லிங்கம், தாம்பரம் மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ, பம்மல் தெற்கு பகுதி செயலாளர் மண்டல குழு தலைவர் வே.கருணாநிதி, பல்லாவரம் மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை பல்லாவரம் மு.ரஞ்சன், ஏ.கே.பிலால், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை ஆர்.மனோகரன், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி தலைவர் செம்பருத்தி துர்கேஷ், தாம்பரம் மாநகராட்சி மேயர் க.வசந்தகுமாரி, தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ், மற்றும் பகுதி ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், கழக பொதுக் குழு உறுப்பினர்கள்.

சுழக அணிகளின் மாநில மாவட்ட நிர்வாகிகள், நகராட்சி, பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்,

இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து மாநகர பகுதி ஒன்றிய நகர, பேரூர், சிற்றூர்களில் இருந்தும் கழக தோழர்கள் அனைவரும் பல்லாயிரக்கணக்கில் அணி திரண்டு பங்கேற்க உள்ளனர்.

இப்பொதுக் கூட்ட மேடை பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. கோலாகலமாக நடைபெற உள்ள இப்பொதுக்கூட்டத்தை திறந்தவெளி மாநாடு போல எழுச்சியுடன் நடத்திட மாவட்டச் செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பர சன் முன்னின்று கழகத்தினருடன் இணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளார்.

இதையொட்டி சென்னை விமான நிலையம் முதல் பல்லாவரம் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் வரை இருபுறமும் கொடிகள் கட்டப்பட்டுள்ளன. மின்னொளியில் தலைவர்களின் கட்-அவுட் ஆங்காங்கே வைக்கப்பட்டு பல்லாவரம் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

Tags:    

Similar News