தமிழ்நாடு செய்திகள்

கி. வீரமணியின் 90-ம் ஆண்டு பிறந்த நாள் விழா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

Published On 2022-12-01 09:18 IST   |   Update On 2022-12-01 09:18:00 IST
  • கி.வீரமணியின் 90-ம் ஆண்டு பிறந்த நாள் விழா நாளை மாலை 5.30 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.
  • திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை தாங்குகிறார்.

சென்னை:

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 90-ம் ஆண்டு பிறந்த நாள் விழா நாளை மாலை 5.30 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை தாங்குகிறார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ரா.முத்தரசன், சென்னை மேயர் ஆர்.பிரியா ஆகியோர் பாராட்டுரை வழங்குகின்றனர். நிறைவாக கி.வீரமணி ஏற்புரையாற்றுகிறார்.

முன்னதாக திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் வரவேற்புரையாற்ற, துணைப் பொதுச்செயலாளர் இன்பக்கனி நன்றி கூறுகிறார்.

Tags:    

Similar News