தமிழ்நாடு

மாணவி பிரியா பெயரில் கால்பந்தாட்ட போட்டி- அண்ணாமலை அறிவிப்பு

Published On 2022-11-17 10:17 GMT   |   Update On 2022-11-17 10:17 GMT
  • பிரியாவின் சகோதரர்கள் தேர்வு செய்யும் 10 பெண்களின் பயிற்சிக்கான செலவை பாஜக ஏற்கும்.
  • நிர்வாக கோளாறு காரணமாக ஒரு உயிர் பறிபோயுள்ளது.

சென்னையில் அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி பிரியாவின் வீட்டிற்கு நேரில் சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாணவியின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பிரியாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை கூறியதாவது:-

இந்தியாவில் மருத்துவ கட்டமைப்பு மிக நன்றாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழகம். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு நவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவி பிரியாவின் பெயரில் சென்னை முழுவதும் கால்பந்தாட்ட போட்டியை பாஜக நடத்த உள்ளது.

மேலும், பிரியாவின் சகோதரர்கள் தேர்வு செய்யும் 10 பெண்களின் பயிற்சிக்கான செலவை பாஜக ஏற்கும்.

பிரியாவின் சிகிச்சை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் முரண்பட்ட தகவல்களை தெரிவிக்கிறார்.

முதலமைச்சரின் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் இந்த தவறு நடந்துள்ளது. நிர்வாக கோளாறு காரணமாக ஒரு உயிர் பறிபோயுள்ளது.

இந்த உயிரிழப்புக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். அரசு பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News