தமிழ்நாடு

ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரெயில்களை உருவாக்க ஒப்பந்தம்

Published On 2023-11-28 09:59 GMT   |   Update On 2023-11-28 09:59 GMT
  • மெட்ரோ ரெயில்கள் 28 மாதங்களில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.
  • பூந்தமல்லியில் கட்டப்பட்டு வரும் பணிமனையில் மெட்ரோ ரெயில்கள் பராமரிக்கப்பட்டு இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சென்னை:

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், ஒட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 10 மெட்ரோ ரெயில்களை (மொத்தம் 30 பெட்டிகள்) வழங்குவதற்கான துணை ஒப்பந்தத்தை அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.269 கோடி மதிப்பில் (வரிகள் உட்பட) வழங்கி உள்ளது.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் அல்ஸ்டோம் டிரான்ஸ் போர்ட் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக இயக்குனர் ராஜீவ் ஜோய்சர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டனர். இந்த ஒப்பந்ததின் கீழ், மெட்ரோ ரெயில்கள் 28 மாதங்களில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். வழித்தடம்-4-ல் பூந்தமல்லியில் கட்டப்பட்டு வரும் பணிமனையில் மெட்ரோ ரெயில்கள் பராமரிக்கப்பட்டு இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News