தமிழ்நாடு செய்திகள்

தே.மு.தி.க மாவட்ட துணைச்செயலாளர் ரங்கராஜ் மீது வழக்கு பதிவு

Published On 2023-02-11 10:33 IST   |   Update On 2023-02-11 10:33:00 IST
  • நசியனூர் சாலையின் இருபுறமும் தே.மு.தி.க. கொடி கம்பங்கள் நடப்பட்டு இருந்தது.
  • போலீசார் அனுமதியின்றி கொடி, கம்பங்கள் அமைத்த தே.மு.தி.க. மாவட்ட துணைச்செயலாளர் ரங்கராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு:

தே.மு.தி.க. பணிமனை திறப்பு விழா நேற்று நசியனூர் ரோட்டில் நடைபெற்றது. தே.மு.தி.க துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பணிமனையை திறந்து வைத்தார்.

இதற்காக நசியனூர் சாலையின் இருபுறமும் தே.மு.தி.க. கொடி கம்பங்கள் நடப்பட்டு இருந்தது. இதற்கான அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து அங்கு வந்த பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் வீரப்பன்சத்திரம் போலீசார் கொடி கம்பங்களை அகற்ற வலியுறுத்தினர். அதற்கு தே.மு.தி.க. நிர்வாகிகள் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். வழக்கு வேண்டுமானால் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து பறக்கும் படை சார்பில் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் அனுமதியின்றி கொடி, கம்பங்கள் அமைத்த தே.மு.தி.க. மாவட்ட துணைச்செயலாளர் ரங்கராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News