தமிழ்நாடு

பி.ஜே.பி. "ஜொள்ளு பார்ட்டி"- திண்டுக்கல் லியோனி கிண்டல்

Published On 2023-03-18 07:29 GMT   |   Update On 2023-03-18 07:29 GMT
  • தமிழ்நாட்டில் பி.ஜே.பி.க்கு ஒரு தலைவர் இருக்கிறார் அண்ணாமலை.
  • தி.மு.க. என்ற ஆலமரத்தோடு மோதிய எவரும் ஜெயித்தது இல்லை என்பதை அவர் இன்னும் உணரவில்லை என்றார்.

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி பேசியதாவது:-

பி.ஜே.பி. என்றால் ஜொள்ளு பார்ட்டி என்றுதான் எல்லோரும் சொல்லுகிறார்கள். உண்மையில் அங்கு அதுதான் நடக்கிறது. எவ்வளவு பெரிய பெரிய பொறுப்புகளில் இருந்தவர்கள்கூட சிக்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பி.ஜே.பி.க்கு ஒரு தலைவர் இருக்கிறார் அண்ணாமலை. அவர் எதை பார்த்தாலும் குற்றம் கண்டுபிடிப்பவர். எதற்கெடுத்தாலும் குறை சொல்பவர். இப்படித்தான் ஒரு போலீஸ் எஸ்.பி. 5 மாடி கட்டிடம் ஒன்றில் மாட்டிக் கொண்டார். கீழே நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. ஐயோ என்னை காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டார். உடனே போலீஸ்காரர்கள் எல்லோரும் ஓடி வந்தார்கள். 4 பேர் கீழே ஒரு வலையை பிடித்துக் கொண்டு சார் நீங்கள் அப்படியே குதித்து விடுங்கள். நாங்கள் பிடித்துக் கொள்கிறோம்" என்றார்கள். அவரும் அதை நம்பி மேலிருந்து கீழே குதித்தார். அவர் வலையை நெருங்கி வரும் போது வருவது எஸ்.பி. என்றதும் நாலு பேரும் வலையை விட்டுவிட்டு விறைப்பாக நின்றபடி சல்யூட் அடித்தார்கள். நிலைமை என்ன ஆகி இருக்கும் பாருங்கள். கீழே விழுந்து கை, கால்கள், முகம் எல்லாம் உடைந்து போனதுதான் மிச்சம்.

இதே நிலையைத்தான் அண்ணாமலையும் சந்திப்பார். தி.மு.க. என்ற ஆலமரத்தோடு மோதிய எவரும் ஜெயித்தது இல்லை என்பதை அவர் இன்னும் உணரவில்லை என்றார்.

இந்த கதையை லியோனி தன் பாணியில் சொன்னதும் கூட்டத்தில் எழுந்த சிரிப்பலை அடங்க வெகு நேரமானது.

Tags:    

Similar News