தமிழ்நாடு
null

பெருநகரம் இருளில் மூழ்கும் என்பதை முன்கூட்டியே கணித்த ஆற்காடு பஞ்சாங்கம்

Published On 2023-10-14 05:53 GMT   |   Update On 2023-10-14 07:23 GMT
  • கடலில் வாழும் ஜீவராசிகளுக்கு கெடு பலன்கள் உண்டாகும்.
  • இஸ்ரேல்-காசா இடையே நடந்து வரும் போரில் காசா நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது.

ஆற்காடு கா.வெ.சீத்தாராமய்யர் சுத்த வாக்கிய சர்வமுகூர்த்த சோபகிருது ஆண்டு பஞ்சாங்கத்தில் ஜோதிடர் சுந்தரராஜன் ஐயர் எதிர்கால பலன்கள் பற்றி கூறியிருப்பதாவது:-

லக்கினாதிபதியான சூரிய பகவான் இந்த ஆண்டு எந்த பதவியும் வகிக்கவில்லை. ஆனால் லக்கினத்திற்கு 9-ம் வீட்டில் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று இருப்பதாலும், ராஜ கிரகமாகிய புதனுடன், சம்மந்தப்பட்டு இருப்பதாலும் ராகு சேர்க்கையுடன் இருப்பதாலும் தனது 7-ம் பார்வையாக கேது கிரகத்தை பார்ப்பதும் விசேஷம் ஆகும்.

இதன் பலன்களாக இந்த ஆண்டு தோல் கம்பெனிகளுக்கு அதிக அளவு பாதிப்பும், மாசு கட்டுபாடு மற்றும் சுற்றுச்சூழல் சீரடைந்து நற்பலன் தரும்.

கடலில் வாழும் ஜீவராசிகளுக்கு கெடு பலன்கள் உண்டாகும். அனைத்து கட்சி தலைவர்களுக்கும் நற்பலன் கிடைக்கும்.

உலக சரித்திரம் வாய்ந்த ஒரு பெரிய தேவாலயம் மற்றும் வெளிநாட்டில் உள்ள முக்கிய நகரங்கள் உண்ண உணவு இன்றி மின்சாரம் இன்றி இருளில் மூழ்கும். தொலைதொடர்பு கடுமையாக 5 நாட்கள் பாதிக்கும்.

தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, அலுமினியம், கண்ணாடி, பாதரசம், விலை ஏறி இறங்கும் என்று ஆற்காடு பஞ்சாங்கத்தில் 11-ம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேல்-காசா இடையே நடந்து வரும் போரில் காசா நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது.

தொலை தொடர்பும் துண்டிக்கப்பட்டது. பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் உண்ண உணவின்றி திண்டாடி வருகின்றனர்.

இதன் மூலம் உலகில் போர் நடக்கும் என்பதை ஆற்காடு பஞ்சாங்கம் முன்கூட்டியே கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News