தமிழ்நாடு

விபத்தில் 5 பேர் பலி- சரத்குமார் இரங்கல்

Published On 2023-12-30 06:36 GMT   |   Update On 2023-12-30 06:36 GMT
  • 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
  • அவர்களின் குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை:

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

அரியலூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி, நந்தனசமுத்திரம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த டீக்கடை, அதன் அருகில் இருந்த வேன் மற்றும் கார் மீதும் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

அவர்களின் குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்விபத்தால் படுகாயமுற்று புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்றுவரும் 19 ஐயப்ப பக்தர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கப்பட்டு, விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News