தமிழ்நாடு செய்திகள்

ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக காத்திருக்கும் பொதுமக்கள்.


காய்ச்சல் வேகமாக பரவுகிறது- காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 500 பேருக்கு சிகிச்சை

Published On 2022-09-22 14:14 IST   |   Update On 2022-09-22 14:14:00 IST
  • தமிழகம் முழுவதும் தற்போது இன்புளூயன்சா வைரஸ் காயச்சல் பரவி வருகிறது.
  • உள்நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் பிரிவில் பொதுமக்கள் அதிகளவில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

காஞ்சிபுரம்:

தமிழகம் முழுவதும் தற்போது இன்புளூயன்சா வைரஸ் காயச்சல் பரவி வருகிறது.குறிப்பாக இந்த வகை வைரஸ் காய்ச்சல் குழந்தைகளைஅதிகளவில் பாதிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும் வைரஸ் காய்ச்சலால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதன்காரணமாக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற பல்வேறு அறிகுறிகளுடன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினந்தோறும் அதிக அளவில் சிகிச்சைக்காக வந்த வண்ணம் உள்ளனர்.

உள்நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் பிரிவில் பொதுமக்கள் அதிகளவில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

தற்போதைய நிலவரப்படி காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் புற நோயாளிகள் பிரிவில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என 250 பேரும், உள் நோயாளிகள் பிரிவில் 250 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாளுக்கு நாள் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த படி உள்ளது. இதன் காரணமாக ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் நோயாளிகள் நிரம்பிய நிலை காணப்படுகிறது.

காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Similar News