தமிழ்நாடு செய்திகள்
null
கிருஷ்ணகிரி அருகே டிராக்டர் மீது ஆம்னி பேருந்து மோதி பயங்கர விபத்து- 5 பேர் பலி
- ஆந்திராவுக்கு கூலி வேலைக்கு சென்றபோது, விபத்து ஏற்பட்டுள்ளது.
- வீகோட்டா கிராமத்தில் கற்றாழை அறுக்கும் பணிக்காக டிராக்டரில் சென்றபோது விபத்து ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே ஆம்னி பேருந்து ஒன்று டிராக்டர் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், டிராக்டர் கடும் சேதத்தை சந்தித்தது.
இந்த கோர விபத்தில், 3 மாத குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தர்மபுரி மாவட்டம் சவுளூர் கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் டிராக்டரில் ஆந்திராவுக்கு கூலி வேலைக்கு சென்றபோது, விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் வீகோட்டா கிராமத்தில் கற்றாழை அறுக்கும் பணிக்காக டிராக்டரில் சென்றபோது விபத்து ஏற்பட்டது.