தமிழ்நாடு செய்திகள்

ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டபோது தப்பிய 2 பேரை பிடித்து விசாரணை

Published On 2023-08-27 12:54 IST   |   Update On 2023-08-27 12:54:00 IST
  • முன்னதாக இந்த சிறப்பு ரெயிலில் மொத்தம் 63 பேர் வந்ததாக பதிவேடுகள் மூலம் தெரியவந்துள்ளது.
  • ஊர் திரும்புபவர்கள் ஆகியோரை கணக்கெடுத்தபோது 2 பேர் மாயமான தகவல் கிடைத்தது.

மதுரை:

மதுரை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா பயணிகள் வந்த ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் இறந்தனர். 25 பேர் லேசான மற்றும் பலத்த காயம் அடைந்து ரெயில்வே மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் சிகிச்சையில் சற்று உடல் நலம் தேறியவர்கள் 22 பேர் இன்று மதியம் மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரெயில்வே நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

முன்னதாக இந்த சிறப்பு ரெயிலில் மொத்தம் 63 பேர் வந்ததாக பதிவேடுகள் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது பலியானவர்கள், சிகிச்சை பெறுபவர்கள், ஊர் திரும்புபவர்கள் ஆகியோரை கணக்கெடுத்தபோது 2 பேர் மாயமான தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட ரெயில்வே போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ரெயில் தீ விபத்து சம்பவத்தில் அவர்களுக்கு ஏதாவது தொடர்பு இருக்குமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:    

Similar News