தமிழ்நாடு

தமிழக தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன் மத்திய அரசு பணிக்கு திடீர் மாற்றம்

Published On 2023-09-01 06:13 GMT   |   Update On 2023-09-01 06:13 GMT
  • நீரஜ் மிட்டல் ஐ.ஏ.எஸ்., மத்திய தொலைத் தொடர்பு துறையின் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
  • உலக முதலீட்டாளர் மாநாடு ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ந் தேதிகளில் நடை பெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை:

தமிழக அரசின் இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தமிழக அரசின் தொழில் துறை செயலாளராக உள்ள மூத்த ஐ ஏ எஸ் அதிகாரி கிருஷ்ணன் மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

இதேபோல நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் தலைவராக உள்ள நீரஜ் மிட்டல் ஐ.ஏ.எஸ்., மத்திய தொலைத் தொடர்பு துறையின் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

உலக முதலீட்டாளர் மாநாடு ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ந் தேதிகளில் நடை பெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உலக தொழில் முதலீட்டு பணிகளை கவனித்துக் கொண்டிருந்த தொழில்துறை செயலாளரான கிருஷ்ணன் மத்திய அரசுப் பணிக்கு திடீரென மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு விடுவித்து தமிழக அரசு விரைவில் அரசாணை பிறப்பிக்க உள்ளது.

மேலும் புதிய தொழில் துறை செயலாளர் நியமனம் தொடர்பாகவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட உள்ளது.

Tags:    

Similar News