தமிழ்நாடு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வேட்பாளர் அறிவிப்பு

Published On 2024-03-23 15:17 GMT   |   Update On 2024-03-23 15:17 GMT
  • தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து போட்டி.
  • ஸ்ரீபெரும்புதூர், ஈரோடு தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டன.

மக்களவை தேர்தலில், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்த கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் தூத்துக்குடி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மக்களவை தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தூத்துக்குடி தொகுதி தமாகா வேட்பாளராக எஸ்.டி.ஆர்.விஜயசீலன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து பாஜக கூட்டணியில் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார்.

ஏற்கனவே, ஸ்ரீபெரும்புதூர், ஈரோடு தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி தொகுதிக்கு வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News