தமிழ்நாடு செய்திகள்

ஈரோடு கருங்கல்பாளையத்தில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது

Published On 2023-04-06 11:11 IST   |   Update On 2023-04-06 11:11:00 IST
  • பயங்கர சத்தத்துடன் 20 மீட்டர் அளவுக்கு சுற்றுச் சுவர் தானாகவே இடிந்து கீழே விழுந்தது.
  • தகவல் கிடைத்ததும் ஊழியர்கள் விரைந்து வந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் சாலையில் கடந்த கற்களை அப்புறப்படுத்தினார்.

ஈரோடு:

ஈரோடு கருங்கல் பாளையம் அழகேசன் நகரில் அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு 4 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. குடியிருப்பின் முன்புறம் 8 அடி உயர சுற்று சுவர் பிரதான சாலையை ஒட்டி உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் 20 மீட்டர் அளவுக்கு சுற்றுச் சுவர் தானாகவே இடிந்து கீழே விழுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சுற்றுச்சூழல் கற்கள் சாலையின் ஒரு புறம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த வழியாக தான் ஈரோட்டில் இருந்து சேலம், நாமக்கல், சென்னை போன்ற ஊர்களுக்கு பஸ்கள் சென்று வருகிறது. சுவர் விழுந்தபோது அந்த இடத்தில் யாரும் இல்லாத தால் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் கிடைத்ததும் ஊழியர்கள் விரைந்து வந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் சாலையில் கடந்த கற்களை அப்புறப்படுத்தினார்.

இதனால் சேலம்-நாமக்கல் -ஈரோடு சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.

Tags:    

Similar News