தமிழ்நாடு

வேளாங்கண்ணி கடலில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறையை குதூகலமாய் கொண்டாட வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2023-05-21 05:53 GMT   |   Update On 2023-05-21 05:53 GMT
  • பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.
  • கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமானவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து உற்சாகமாக கடலில் நீராடுகின்றனர்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்து பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், யாத்திரிகள் வந்து செல்கின்றனர்.

தற்போது முழு ஆண்டு தேர்வு விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வேளாங்க ண்ணியில் குவிந்துள்ளனர்.

பின்னர் நடுத்திட்டு, கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்த்தனர். மேலும் தங்களது வேண்டுதல்களை மொட்டை அடித்தும், மெழுகுவத்தி ஏற்றியும், மாதாவிற்கு மாலை அணிவித்தும், தென்னங்கன்றுகளை காணிக்கையாக செலுத்தியும் பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமானவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து உற்சாகமாக கடலில் நீராடுகின்றனர். மேலும் கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கி சுடுதலில் ஈடுபடும் சுற்றுலா பயணிகள் ராட்டினத்தில் தங்களது குழந்தைகளை அமர வைத்து கோடை விடுமுறையை குதூகலமாக கொண்டாடி வருகின்றனர்.

அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு வேளாங்கண்ணி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News